என் சைக்கிள் Research லேப் நோக்கிச் சென்றது.

கார் திரும்பி லோக்மான்யா வீதிக்குச் சென்று நின்றது.

 

தர்மேஷ் காரை நிறுத்திவிட்டு, “ஜஸ்ட் ஒரு ஐந்தே நிமிடம்.. மதன் பாயை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்… ஆல்ரெடி லேட் ….என்னைக் கடித்து துப்பிவிடுவார்”..என்று சொல்லிவிட்டு பதில் கூட எதிர்ப்பார்க்காமல் காரை விட்டு இறங்கி நடந்து சென்றார்.

கையில் ஒரு நியூஸ் பேப்பரில் மடித்த ஒரு bundle இருந்தது.

பூர்ணிமா அகர்வால் எதுவேமே சொல்லவில்லை…கண்களை மூடி, அப்படியே அயற்சியில் கண்களை மூடினார்.

 

ஹ்ம்ம் ..அதே பழைய வாழ்க்கை ..

பிகானீரில், காரில் ஏறிய போது சித்தரஞ்சன் தள்ளாடிக்கொண்டே வெளியில் வந்து நின்றது இன்னும் கூட நினைவில் இருந்து அகலவில்லை.

ஏன், தந்தையிடம் இருந்த பழைய உற்சாகம் எதுவுமே இல்லை? கையை கூட ஆட்டவில்லை?

வயதா? இல்லை தனக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாமே தந்தைக்கும் தெரியுமா என்ற குழப்பம் பூர்ணிமாவுக்கு இருந்தது.

கார் கிளம்பும் முன், தான் மக்களின் கையை அழுத்திப் பிடித்தார் சித்தரஞ்சன்.

அந்த அழுத்தம் வலிமையாக இருந்தது. அந்த அழுத்தம் வழக்கத்திற்கு மாறாக சில நொடிகள் நீடித்தது.

 

மனைவி இல்லாத 75 வயது சித்தராஞ்சனனுக்கு தன் மகளுக்கு தைரியம் கொடுக்க இந்த கை அழுத்தத்தை விடப் பெரிதாய் கொடுத்துடுவிட ஒன்றும் இல்லை.

கடந்த ஒரு மாதத்தில் ஓரளவு கோவையில் நடப்பதை சித்தரஞ்சன் ஓரளவு யூகித்து இருக்கக் கூடும் என்றும் பூர்ணிமா நம்பினார்.

தன் மகள் படும் அவதியைத் தீர்க்க முடியாமல் தவிக்கும் வயதான தந்தை, பெரும்பாலும் அமைதியை மட்டுமே கேடயமாக உபயோகிப்பார்கள்.

To a father growing old, nothing is dearer than a daughter.

 

அப்பா பேசி இருக்கலாம்.

இருந்தாலும் பேச மாட்டார்.

Some decisions are made automatically and without much thought.

A unilateral decision without discussion.

 

ஒரே ஒரு ஆறுதல் வார்த்தை, இருவரின் கண்களில் இருந்து நீரைக் கொண்டுவரும் என்று தெரிந்த தந்தைகள் பொதுவாக சிலை போல் நின்று வழி அனுப்பி வைப்பார்கள்.

சித்தரஞ்சன், பிடித்த கையின் அழுத்தம் இன்னும் மீதி இருந்தது.

 

கையை, தட்டி ….Where is papa ..?? என்றார் மகள்.

திரும்பி ஜன்னலைப் பார்த்தார் பூர்ணிமா.

தர்மேஷ் அவசர அவசரமாக மாடிப் படிகளில் ஏறிக்கொண்டு இருந்தார்.

அந்த வீட்டின் முன்னே மிக மிகச் சிறிதாக ” Banswara Bagri And Sons Limited”, Proporiter “மதன் பானுபிரசாத்” என்ற போர்ட் ஏழையாகத் தொங்கி கொண்டு இருந்தது.

அதில் எழுதப்பட்ட எழுத்துக்களின் பெயிண்ட் பிய்ந்து பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தது.

ஒரு பிசினஸில் எங்கு பணம் போட வேண்டும், எங்குப் போடக்கூடாது என்ற தத்துவங்கள் ஒரு குஜராத்தியின் நேம் போர்ட்டில் இருந்து ஆரம்பிக்கும்.

மதன் ஒரு குஜராத்தி – மார்வாரி ஹைபிரிட்.

அம்மாவின் மார்வாரி ரத்தம். அப்பாவின் குஜ்ஜு மூளைக்கு இரத்தம் கட்சில் இருந்து பாய்ந்தது.

கிட்டத்தட்ட, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு பெயிண்ட் அடித்த பெயிண்டரிடம் கடைசி செட்டில்மென்ட் முடிக்கும் முன் ஓசியில் எழுதி வாங்கிய நேம் பலகை அது.

அந்த பெயிண்டரின் கோவம் அந்தக் கோனை எழுத்துக்களில் தெரிந்தது.

 

 

மதன் பாயுக்கும், தரமேஷுக்கும் 30 வருட பிசினஸ் நடப்பு.

ஒருவருக்கு ஒருவர் உயிரையே பிசினஸில் கொடுப்பார்கள், பணம் இருவருக்கு வருகிறது என்றால்.

30 வருடமாக பணம் வருவதில் பிரச்சனை இருந்ததில்லை.

ஆனால், கடந்த ஒரு வருடத்தில், மார்க்கெட் “டல்” ஆனதால் இருவரிடம் சில மன கசப்புகள்.

பின், அது சில நேரம் பெரிதாகி தானே அடங்கி விட்டது.

தரமேஷின் 70% வியாபாரம் மதன் விழியாகத்தான்.

மதனின் 50% வியாபாரம் தர்மேஷ் பொறுத்துத்தான்.

தர்மேஷ் Yarn சப்ளையர். மதன் Yarn Trader.

தர்மேஷ் நூலை குஜராத், மத்திய பிரதேஷ், புஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்து வாங்கி மதனிடம் கொடுப்பார்.

மதன் நூலைப் பஞ்சாலைகளுக்கு டிரேடிங் கம்பெனி மூலம் விற்பார்.

ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் பஞ்சு, மில்லை வந்து அடைய சுமார் 18 பேரின் கைகளை அது தொட வேண்டும்.

அதில் தர்மேஷ், மதன் இருவரும் முக்கிய புள்ளிகள்.

இவர்கள் இருவர்தான் மீதி இருக்கும் 16 பேரை முடிவு செய்வார்கள்.

இதில் ஒரு லிங்க் காலியானாலும் மில் நின்றுவிடும்.

பஞ்சின் விலையை ஏற்றுவதும், இறக்குவதும் இவர்களால் முடியும்.

டிமாண்ட் சப்ளை இரண்டையும் ஒரு சிறு நோட்டு புத்தகத்தில் இருக்கும் போன் நம்பர்களை வைத்து முடிவு செய்வார்கள்.

 

In Simple Words…They Control the Market.

Buy on the Rumor and Sell on the News.

மதன் creates Price rumors among buyers.

தர்மேஷ் buys cotton from Farmers based on News.

மார்க்கெட் இப்போது செம volatile.

தர்மேஷ்க்கும், மதனுக்கு இப்போது நடக்க இருக்கும் மீட்டிங் ஒன்று ரூமர் create செய்வதாக இருக்கும்.

இல்லை நியூஸ் அறிவிக்க இருக்கும்.

30 வருடமாகச் சுமூகமாக கடந்த அந்த 30 நிமிடங்கள் இப்போது எல்லாம் மனக் கசப்பிலும், விவாதங்களிலும் முடிகின்றன.

என்ன ஆகப் போகிறது என்பதில்தான் பூர்ணிமாவின் அடுத்த சில வாரங்களின் நிம்மதி ஒளிந்து இருக்கிறது.

கடிகாரம் முப்பது நிமிடத்தைக் கணக்கிட தொடங்கி விட்டது.

 

எனக்கும் 30 நிமிட வேலைதான்.

சைக்கிளில் இருந்து நிமிந்து பார்த்தேன்.

என் காலேஜ் நுழை வாயிலில் இருந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தேன்.

School of Genetics – நேம் பலகை. என் டிபார்ட்மெண்ட்.

நான் படித்தது, 1906 ல் சென்னையை ஆண்ட Sir. ஆர்த்தர் லாலி என்பவர் ஆரம்பித்த இந்தியாவிலேயே மிகப் பழமையான ஒரு அறிவியல் கல்லூரி இது.

வெறும் 8 பேர்தான் முதலில் சேர்ந்தார்கள்.

கிட்டத்தட்ட, 90 வருடங்களுக்கு மேல் அந்த மரப்பலகையில் ” School of Genetics” என்ற எழுத்துக்கள் எந்த வித பஞ்சமும் இல்லாமல் பணக்காரன் போல் மினு மினுமினுத்தன.

சைக்கிளை, லேப் கீழே நிறுத்தினேன்.

 

காலைப் பனியில், புள் தரையில் இரண்டு பூச்சுக்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொண்டு இருந்தன.

பார்த்தவுடன் அவை எந்தப் பூச்சுக்கள் என்று தெரிந்து விட்டது.

அதன் பெயர் “Praying Mantis”

 

உருண்டை மண்டை.

முட்ட முட்டக் கண்கள்.

தன், இரண்டு முன்னங் கால்களையும் தூக்கி வைத்துக் கும்பிடுவது போல போஸ் கொடுப்பது போல் இருப்பதால் இதன் பெயர் “Praying Mantis”

தமிழில் “கும்பிடும் பூச்சுக்கள்” என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்த பூச்சுசிகள், தங்கள் தலையை 180 டிகிரி திருப்பிப் பார்க்க முடியும்.

 

சுமார் ஒரு வருடம் வாழும் இவைகள் வாழ்க்கை வினோதமானது.

ஆண், பெண்ணுடன் ஜல்சா செய்ய விரும்பினால் ஆண் பூச்சு, பெண் முன்னால் முதலில் பரதம் ஆடவேண்டும்.

To Attract.

அந்த நடனம் உத்தர தாண்டவம் போல் இருக்கும்.

அதற்குப் பெயர் : Dance of Death.

ஆணின் உத்ரதாண்டவத்தை ரசிக்கும் பெண் தன் இரண்டு கைகளையும் வைத்துக் கும்பிட்டு கலவி இனப்பெருக்கம் செய்ய அழைக்கும்.

அந்த ” Dance of Death’ க்கு முன்னால் ஒரு ” கை எடுத்துக் கும்பிடு” நடந்தே தீரும்.

ஆண், அதை நம்பி பெண்ணிடம் கலவும் போது, பெண் பூச்சி 180 டிகிரி திரும்பி மெதுவாக ஆண் பூச்சிக்கு முத்தம் கொடுக்கும்.

பின், மெதுவாகக் காம வெறியில் ஒரு சின்ன கடி கடிக்கும்.

பின் அந்தக் கடி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி மெதுவாக ஆண் பூச்சியை உண்ண ஆரம்பிக்கும்.

கை, கால்கள் என்று ஒவ்வொன்றாக ஜல்சா நடக்க நடக்கவே உண்ண ஆரம்பிக்கும்.

180 டிகிரி திரும்பி உயிர் போகாத வண்ணம் கடைசி கிராண்ட் finale முடியும் வரை காத்து இருந்து …

கடைசியில் வெடுக் என்று ஆண் தலையை விழுங்கி விட்டு மெதுவாக நடந்து சென்று விடும்.

ஆணின் விந்து வந்து சேர்ந்தவுடன் கடைசி வெடுக் கடி நடக்கும்.

மிச்ச மீதும் ஆணின் உடம்பு பாகங்களை, பல ஆண் பூச்சுக்கள் ஓடி வந்து வட்டமிட்டு பார்க்கும்.

அதில் ஏதாவது ஒரு ஆண் மீண்டும் ஒரு பெண்ணை அடுத்த வருடம் தயாராகும்.

லெபனான் நாட்டு கவி “கலீல் ஜிப்ரான்” சொல்லியது ஏனோ இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.

We choose our joys and sorrows long before we experience them.

பல நடப்புகள், பல உறவுகள் என்று அனைத்தும் எங்கு போய் முடியும் என்பதை முன்னரே நாம் அனுபவித்துக்கொண்டுதான் இருப்போம்.

அதை realize செய்தாலும் விட முடியாது.

அதில் சந்தோஷமும் இருக்கும், சோகமும் இருக்கும்.

ஆண் பூச்சிக்கு, நடனம் ஆடும் போது இருக்கும் சந்தோஷம் இறக்கும் வரை இருக்கிறது.

 

உயிர் போகும் அந்த ஒரு செகண்ட் வேணாலும் சோகம் இருக்கலாம்.

ஆனால் அந்த பூச்சியே இறந்த பின்பு, அதன் சோகத்தை வைத்து கவலைப்பட யார் இருக்கிறார்கள்?

இது அதுவே தேடிக்கொண்டது.

Till you die …Live what you love is a reminder to create a life you love.

இந்த உலகில் ஏகப்பட்ட Praying மென்டிஸ் இருக்கின்றன..

பணம், காதல், உறவுகள், மதம், இனம், சாராயம், சர்க்கரை வெள்ளை பூண்டு முதல் வெளிநாட்டு வாழ்க்கை வரை.

முதல் கடியில் இன்பம் இருப்பினும், இவை அனைத்துமே ஒரு நாள் டான்ஸ் to டெத் என்று ஆடத்தான் போகின்றன.

இருந்தும் தெரிந்தே ஆடுகிறோம்.

 

இதில் ஒரு exception.

எல்லா முறையும் ஆண்களே இறக்க வேண்டும் என்பதில்லை.

சுமார் 50 முறை நடக்கும் ” Dance of Death” ல், சுமார் ஒரு முறை தோராயமாக ஆண் பெண்ணை கடித்து விழுங்கும்.

1: 50 விகிதத்தில் ஆண்கள் இறக்கும் போதும் ஏன் மீண்டும் மீண்டும் ஆண்கள் பெண் பூச்சியை நாடுகிறது?

ஒரு முறை வெற்றி பெற்ற ஆண், பல முறை வெற்றி பெற்ற பெண்ணை விட எப்போதும் அதிகம் தம்பட்டம் அடிப்பான்.

அதை நம்பி 49 ஆண்கள் மீண்டும் மீண்டும் வந்து பெண்ணிடம் மடிவார்கள்.

அந்த 1% ல் நாம் தப்பித்து விடுவோம் என்ற நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை.

 

சைக்கிளை நிறுத்திய நான், இரண்டு பூச்சிகளையும் நோக்கினேன்.

1: 50. இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

My பெட் is on female.

அதிக probablility இருப்பது தானே வெல்லும்??

 

லேப் முதல் மாடியில். மொத்தம் 23 மர படிக்கட்டுக்கள்.

Spiral மாடிப்படி. பிரிமிங்ஹாம் என்ஜினீயர் கட்டியது.

 

நான், வேகமாக மாடிப்படி ஏறும் போது கடிகாரம் பார்த்தேன்.

7,30 AM. இன்னும் 30 நிமிடத்தில் வேலையை முடித்துவிட்டு ஹாஸ்டல் சென்று மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டுத் தூங்க வேண்டும்.

தூங்கும் முன் வரைந்த ஐஸ்வர்யா ராயை ஒரு முறை பார்த்துவிட்டு தூங்கினால், எழுந்து பார்த்தவுடன் செய்ய வேண்டிய correction தெரியும்.

இப்போது, கடிகாரம் முப்பது நிமிடத்தைக் கணக்கிட தொடங்கி விட்டது.

லேப் கதவை நெருங்கினேன்.

 

ஆல்ரெடி கதவு திறந்தே இருந்தது.

கதைவை திறந்து உள்ளே நுழைந்தார் தர்மேஷ்.

மதனின் பின் தலை மட்டுமே தெரிந்தது.

போனில் யாருடனோ ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தார்.

தர்மேஷ், மதன் பாய் என்று மெதுவாகக் கூப்பிட்டார்..

 

அங்கே ஒரு உருவம் …

 

உருண்டை மண்டை.

முட்டை முட்டைக் கண்கள்.

180 டிகிரி தலையை திருப்பியை

Praying மென்டிஸ் போல இருக் கைகளையும் கூப்பிக் கும்பிட்டு

வணக்கம் தர்மேஷ் …உள்ளே வா ..என்று கூப்பிடுகிறது..

 

மதன் பானுபிரசாத் உங்களுக்காக முதல் முறையாகத் திரும்பி பார்க்கிறார்.

உருண்டை மண்டை.

முட்டை முட்டைக் கண்கள்.

கையில் தர்மேஷ் வாழ்க்கை புகைந்து கொண்டு இருந்தது ..

தொடரும்