அல்பர்ட்டாவில் டைனோசர் பார்க் ( Dinosaur Provincial Park ) இருக்கிறது. பலர் சென்று இருக்கலாம்.

இது அந்த இடத்தை ஒட்டிய ஒரு தகவல்.

இன்று ஒரு அறிவியல் கட்டுரை படித்துக்கொண்டு இருக்கும் போது எழுத வேண்டும் என்று தோன்றியது ..

ஓகே …back to தி மேட்டர்.

அந்த இடம் Drumheller.

சுமார் ஊட்டி மலை height இருக்கும்.

2000 + அடி Above MSL.

கடல் மட்டத்துக்கு மேல்.

டைனோசார்கள் இந்த உலகில் அழிந்தவுடன்தான் இந்தப் பூமியில் ஆல்ப்ஸ் மற்றும் இமய மலைகளே உருவானது.

டைனோசார்கள் பூமி மட்டத்திலேயே வாழ்ந்த உயிரினம். முக்கியமாக நார்த் அமெரிக்கன் டைனோசார்கள் கடல் மட்டத்திலேயே வாழ்ந்து இறந்தன.

பின் எப்படி இவைகளின் fossil 2000 அடி உயரத்தில் கிடைத்தது ? இவைகளின் இறந்த உடலை யார் சுமந்து கொண்டு மலை மீது வைத்தது ?

வைத்தது வேறு யாரும் இல்லை.

இயற்கை. கடலும், பனியும், மலைகளும் அவைகள் இறந்த உடலைத் தூக்கி மலை மீது வைத்தன. இது தனிக்கதை.

evolution னில் தானே அழிந்த உயிரினங்கள் பல உள்ளன. சில உயிரினங்கள் சிலவற்றால் அழிக்கப்பட்டன . ஏன் அழிக்கின்றோம் என்று தெரியாமலே அழிந்துவிட்டன பல. இதில் டைனோசர்கள் கடைசி வகை. வின் வெளி கற்களால் இறந்தன என்கிறது அறிவியல் குறிப்பு.

இப்படி பல இறந்தவைகளை உலகில் தினம் கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் ஒரு விந்தை இருக்கிறது.

இப்போது நடக்கும் அகழ்வாயராய்ச்சிகளில் தானே அழிந்த உயிரினங்களின் உடல்கள் நிலப்பரப்புகளில் கிடைக்கின்றன.

இன்னொன்றை அழித்த உயிரினங்களில் உடல்கள் கடலுக்கு அடியில் புதையுண்டு எடுக்க முடியாமல் கிடக்கின்றன.

ஏன் அழிந்தோம் என்று தெரியாத பாவப்பட்ட உயிர்களின் உடல்களை இயற்கை மலைகளின் மீது சுமந்து சென்று பாதுகாத்து வைத்து இருக்கின்றான்.

எல்லோரும் இறந்தவுடன் மண்ணுக்குப் போனாலும், ஏன் இறந்தோம் எப்படி இறந்தோம் என்பதைப் பொறுத்து உங்கள் உடலை இயற்கை அழுத்தி வைக்கும் அல்லது தூக்கி நிறுத்தும்.

Even you are dead, Nature will decide where to keep your body. That’s called Soul.

Nature is God.

இறந்தவர்கள் எல்லோரும் பூமிக்குள் செல்வதில்லை.